Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏழாண்டுகளில் இல்லாத வகையில் சில்லறை விற்பனையில் பாரிய சரிவு

In
Updated: 11:09 GMT, Apr 21, 2017 | Published: 11:08 GMT, Apr 21, 2017 |
0 Comments
1145
This post was written by : Risha
sale

பிரித்தானியாவின் சில்லறை விற்பனையானது மார்ச் மாதத்திற்கான காலாண்டில், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. அதன் எதிரொலியாக அன்றாட பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, காலாண்டு விற்பனையானது 1.4 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும், இது கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.8 வீத வீழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் தேசிய புள்ளியியல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், ஆடை மற்றும் காலணி பொருட்களை தவிர ஏனைய பொருட்களுக்கான கேள்வி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், வீட்டுப்பொருட்கள் மற்றும் பெட்ரோல் விற்பனையிலேயே பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg