Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எலிசபெத் மகாராணியின் பிறந்த தினத்தை முன்னிட்டு குழந்தை பருவ புகைப்படம் வெளியிடப்பட்டது

In
Updated: 15:28 GMT, Apr 22, 2017 | Published: 11:29 GMT, Apr 22, 2017 |
0 Comments
1149
This post was written by : Risha
quee

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் 91ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது குழந்தை பருவ புகைப்படமொன்றை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

அரச குடியிருப்பு கட்டடமான வின்ட்சர் கோட்டையில் எலிசபெத் மகாராணி நேற்று (வெள்ளிக்கிழமை) தனது பிறந்த தினத்தை கொண்டாடினாா்.

மகாராணியின் பிறந்த தினத்தை குறிக்கும் வகையில் லண்டன் ஹைட் பார்க்கில் துப்பாக்கி வேட்டுக்கள் வெடிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து மகாராணியின் பிரசன்னத்துடன் விசேட பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

கடந்த ஆண்டு மகாராணியின் 90ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவிலும், கடல்கடந்த நாடுகளிலும் அனைவரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வானவேடிக்கைகள் ஒளிரவிடப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, மகாராணியின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg