Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மக்களுக்கு நலன் தரும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துமாறு பிரதமர் வேண்டுகோள்

In இந்தியா
Published: 11:46 GMT, Apr 21, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Surenth
Narendra-Modi1-2

மக்களுக்கு நலன் தரும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துமாறும் அதனை முறையற்ற விதத்தில் பயன்படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பொது சேவை விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியல் சீர்திருத்தங்களை மட்டுமே அரசியல் வாதிகளால் கொண்டுவர முடியும் அதனை செயல் படுத்துவதற்கு அதிகாரமும், மக்களின் பங்களிப்பு தேவை என அவர் தெரிவித்தார்.

எனவே தான், எந்த ஒரு அதிகாரத்தையும் அதிகாரிகளிடம் இருந்து குறைக்கவும் இல்லை குறைக்க இடமளிக்க போவதுமில்லை எனவும் கூறினார்.

சிவில் சேவையில் உள்ளவர்கள் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் சிரேஸ்ட அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை சுமையாக மாற்றிக்கொள்ள கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg