Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இரட்டை இலை சின்னம் யார் பக்கமோ, நான் அவர் பக்கம்: செந்தில்

In
Updated: 14:26 GMT, Apr 21, 2017 | Published: 12:34 GMT, Apr 21, 2017 |
0 Comments
1304
This post was written by : Surenth
Senthil

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர் பக்கம் தான் இருப்பேன் என நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தை எந்த அணி கைப்பற்றுகிறதோ அவர்களுக்கே தனது முழுமையான ஆதரவு எனவும் நடிகர் செந்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

பன்னீர்செல்வம் அணியையோ அல்லது எடப்பாடி அணியையோ தான் சார்ந்தவன் இல்லை எனறும் தான் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசியாக என்றும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பன்னீர்செல்வம் அணி மற்றும் எடப்பாடி அணி ஆகிய அணிகள் இணைந்து செயற்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி எனவும் நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner