Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா ரஜினி?

In
Published: 17:25 GMT, Apr 21, 2017 |
0 Comments
1038
201704151101113484_Rajnikanth-tells-bharathiraja-will-not-accept-me-as-a-good_SECVPF

அரசியலுக்கு வரவேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை ரஜினி நிறைவேற்றுவாரா?’ என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்  அவருடைய ரசிகர்கள்.

நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என பல காலமாகவே ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட தங்களோடு இணைந்து கொள்ளுமாறு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், எதற்கும் பதிலளிக்காமல்  இருந்து வருகிறார் ரஜினி.

இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் கோவையில் ரஜினியை அழைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு மன்றம் என்ற பெயருடன் இருக்கும் போஸ்டரில், ‘மக்கள் வாழவேண்டும் என்றால், நீங்கள் ஆள வேண்டும்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. அத்துடன், ரஜினியின் முழு உருவ புகைப்படமும் அதில்  அச்சிடப்பட்டுள்ளது.

ரஜினி அரசியலுக்கு  வரவேண்டும் என தாங்கள் விரும்புவதாக கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)