Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் அமைச்சர் ராஜிதவிடம் கையளிக்கப்படும்: சத்தியலிங்கம்

In இலங்கை
Published: 04:18 GMT, Apr 22, 2017 |
0 Comments
1234
icon_com
This post was written by : Risha

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள சுகாதார அமைச்சின் மாநாட்டின் போது, குறித்த விபரங்கள் கையளிக்கப்படவுள்ளன.

வவுனியாவில் 57ஆவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வடமாகாண சுகாதார அமைச்சரிடம் காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் விபரங்களை கையளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே வடமாகாண அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை கடந்த 2ஆம் திகதி நேரில் சந்தித்த மத்திய அமைச்சர், குறித்த விபரங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய இத்தரவுகள் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg