Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அவுஸ்ரேலிய பிரதமரை சந்தித்தார் மைக் பென்ஸ்

In
Published: 05:37 GMT, Apr 22, 2017 |
0 Comments
1380
icon_com
This post was written by : Sylviya

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence), இன்று (சனிக்கிழமை) அவுஸ்ரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல்லை (Malcolm Turnbull) நேரில் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு, அவுஸ்ரேலியாவில் பிரசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றான சிட்னியில் நடைபெற்றுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமரை பென்ஸ் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் வர்த்தக மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவர் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க மற்றும் அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிய நாடுகளுக்கு  10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பென்ஸ், நான்கு ஆசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த பென்ஸ் தற்போது அவுஸ்ரேலியாவை வந்தடைந்துள்ளார்.

தென்சீனக் கடல் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் கொரிய தீபகற்பத்திற்குள்ள அச்சுறுத்தல்கள் என்பன விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையிலேயே பென்ஸ் அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg