Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இராஜ மரியாதையுடன் 91ஆவது பிறந்தநாளைக்  கொண்டாடினார் மகாராணி எலிசபெத்

In
Published: 09:31 GMT, Apr 22, 2017 |
0 Comments
1330
icon_com
This post was written by : Sylviya

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் 91ஆவது பிறந்தநாள் இராஜ மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.

உலகிலேயே மிகக் கூடிய நாட்கள் அரியணையில் உள்ள வயது கூடிய மகாராணி எலிசபெத் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மகாராணியின் பிறந்தநாளன்று அவருக்கு கௌரவம் தெரிவிக்கும் வகையில் லண்டன் ஹைட் பார்க் (Hyde Park) மற்றும் லண்டன் டவரில் (Tower of London) துப்பாக்கி வேட்டுக்கள் முழங்கப்பட்டன.

இது தொடர்பான காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராணியின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1926 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பிறந்த மகாராணி எலிசபெத், தனது 25ஆவது வயதில் அரியணை ஏறினார்.

முதுமைக் காலத்தை அனுபவித்து வரும் போதிலும் அவர் தனது பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை நிறைவேற்றத் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg