Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கர்நாடக அமைப்பு முன்னெடுக்கும் போராட்டம் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் எதிரானது: சீமான்

In இந்தியா
Published: 08:28 GMT, Apr 22, 2017 |
0 Comments
1645
icon_com
This post was written by : Surenth

பாகுபலி – 02 திரைப்படம் தொடர்பில் கர்நாடக அமைப்பு முன்னெடுக்கும் போராட்டம் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் எதிரானது என நாம் தமிழர் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டம் தொடர்பில் இன்று (சனிக்கிழமை) திருவண்ணாமலையில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாகுபலி – 02 திரைப்படத்தை வெளியிடக்கூடாது என கர்நாடக அமைப்பு ஒன்று கூறுவதை திரையுலகமும் கர்நாடக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம் எனவும் தெரிவித்தார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடர்களை நடிகர் சத்தியராஜ் பேசியமைக்கு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறினார்.

மேலும், இது குறித்து நடிகர் சத்தியராஜ் யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg