Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரான்ஸ் தீவிரவாதத் தாக்குதல்: நெதர்லாந்து பிரதமர் இரங்கல்

In ஐரோப்பா
Published: 10:15 GMT, Apr 22, 2017 |
0 Comments
1286
icon_com
This post was written by : Sylviya

பிரான்ஸின் பரிஸ் நகரில் உள்ள முக்கிய கடைத்தெருவான சோம்ப்ஸ் எலிசேயில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தாருக்கு,  நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே (Mark Rutte) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் நெதர்லாந்தின் ஹேக் (Hague) நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) கூடியிருந்த நிலையிலேயே ரூட்டே தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்து விவாதிக்கும் வகையிலேயே நேற்றைய கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) பரிஸில்  நடத்தப்பட்ட குறித்த தீவிரவாதத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றது. அதனால் பரிஸ் நகரில் கடும் பதற்றம் நிலவிவரும் நிலையில், குறித்த பகுதியில் ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg