Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கண்டி மேதினக் கூட்டத்துக்காக 2800 பேரூந்துகள் தயாா்: சரத் ஏக்கநாயக்க

In இலங்கை
Updated: 14:53 GMT, Apr 22, 2017 | Published: 12:01 GMT, Apr 22, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Ravivarman
Sarath-Ekanayake_0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்திற்கு 2800 பேரூந்துகளில் ஆதரவாளர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) மேதினக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இம்முறை நடத்தப்படவுள்ள மேதினக் கூட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டமே மிகப் பெரிய கூட்டமாகும்.  இதில் தற்பொழுதே பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்வதாக உடன்பட்டுள்ளனர்.

1 லட்சத்து 20 ஆயிரம் பேர்வரையில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இவ்வாறு கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான சகல அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg