Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திரக் கட்சியின் அழைப்பை ஏற்பாரா மஹிந்தர்?

In இலங்கை
Updated: 04:26 GMT, Apr 23, 2017 | Published: 04:23 GMT, Apr 23, 2017 |
0 Comments
1208
This post was written by : Varshini
Mahinda_gestures

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி கெட்டம்பே மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மகளிர் உயர்கல்லூரியின் முன் ஆரம்பமாகவுள்ள சுதந்திரக் கட்சியின் மே தின பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவித்துள்ள முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பேரணியில் கலந்துகொள்ளும் மக்களுக்கான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவற்றில் மஹிந்த கலந்துகொள்ளாமை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இம்முறை மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg