Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபைர் நியமனம்

In இலங்கை
Updated: 05:57 GMT, Apr 23, 2017 | Published: 05:49 GMT, Apr 23, 2017 |
0 Comments
1216
icon_com
This post was written by : Ravivarman
MS. Subair

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சராகவும் முன்னாள் பிரதித் தவிசாளராகவும் பதவி வகித்திருந்தார்.

இவர், இதற்கு முன்னர் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருந்து, பின்னர் அதிலிருந்து விலகி தற்போது இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg