Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரெய்னா அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடியவர்: கம்பீர் புகழாரம்

In கிாிக்கட்
Updated: 06:25 GMT, Apr 23, 2017 | Published: 06:18 GMT, Apr 23, 2017 |
0 Comments
1395
This post was written by : Surenth
Gautam Gambhir IPL

குஜராத் லயன்ஸ் அணியின் ரெய்னா அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடியவர் என்றும் அவரின் துடுப்பாட்டத்தால்தான் கொல்கத்தா அணி குஜராத் லயன்ஸ் அணியிடம் தோற்றதெனவும் கொல்கத்தா அணியின் தலைவர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

குஜராத் லயன்ஸ் அணியுடனான போட்டியின் போது, கொல்கத்தா அணி இரண்டாவது தோல்வியை பெற்றது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “முதலில் துடுப்பெடுத்தாடி 187 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தோம். இந்த இலக்கு என்பது எதிரணிக்கு ஒரு பெரிய இலக்கு. ஆனால் குஜராத் லயன்ஸ் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி வெற்றி பெற்றது.

அந்த அணியின் ஆரோன் பிஞ் மற்றும் மெக்கலம் ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

அவர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ததன் பின்னர் குஜராத் லயன்ஸ் அணிக்கு எமது அணியால் சிறந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. குஜராத் லயன்ஸ் அணியின் துடுப்பாட்ட வரிசை மிக வலுவாக அமைந்திருந்தது. அதிலும் ரெய்னாவின் அதிரடியான துடுப்பாட்டமே அணியை வெற்றி பெற செய்தது” என கம்பீர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg