Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

In இலங்கை
Published: 06:39 GMT, Apr 23, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Ravivarman

கிளிநொச்சி இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில், உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற இவ்விபத்தில், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்த 26 வயதுடைய கமலேஸ்வரன் கிரிஷாந்த் எனும் இளைஞனே பலியாகியுள்ளார்.

இரத்தினபுரம் சந்திக்கு அருகில் உள்ள வாகனங்கள் திருத்தும் இடத்தில் இருந்து திருவையாறு நோக்கி செல்ல முற்பட்ட உழவு இயந்திரத்துடன் திருவையாறு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதால் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விபத்தில் உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

DSC03193 DSC03191

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg