Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா – அமெரிக்காவுக்கு இடையிலான உறவு வலுவடைந்துள்ளது: அருண் ஜெட்லி

In இந்தியா
Updated: 10:05 GMT, Apr 23, 2017 | Published: 09:54 GMT, Apr 23, 2017 |
0 Comments
1265
This post was written by : Shailu

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருவதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், பரஸ்பர உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அருண் ஜெட்லி, அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவர் நவ்தேஜ் சிங் சர்னா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்தியா- அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது.

இந்தியா – அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுக்கு இரு நாட்டு தேசப்பற்றாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களை விட தற்போது இரு நாடுகளினதும் நல்லுறவு மிகவும் வலிமையாக காணப்படுகின்றது.

அமெரிக்க வர்த்தகத் துறையின் செயலாளர் வில்பர் ராஸ் உள்ளிட்டோருடனான பேச்சுவார்த்தையின்போதே இந்த நம்பிக்கை ஏற்பட்டது. விரைவில், அமெரிக்க நிதியமைச்சரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்” என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg