Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரி – ருவென்ரி போட்டிகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது: சாஹல்

In கிாிக்கட்
Updated: 10:13 GMT, Apr 23, 2017 | Published: 09:57 GMT, Apr 23, 2017 |
0 Comments
1122
This post was written by : Surenth

ரி – ருவென்ரி போட்டிகளில் தனக்கு கூடுதல் பொறுப்புக்கள் வந்து விட்டதாகவும் இதன் காரணமாக தனக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சுழல்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திவரும் சாஹல் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதி சிறப்பாக செயற்பட வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாகவும் தான் தொடர்ச்சியாக சிறந்த முறையில் பந்து வீச தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த இங்கிலாந்து அணியுடனான ரி – ருவன்ரி போட்டியின் போது பெற்றுக்கொண்ட 6 விக்கெட்டுக்கள்தான் தன் வாழ்க்கையை மாற்றி அமைத்ததாகவும் இதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்டு வீசும் பந்து சரியான முறையில் சென்றால் தனக்கு பிடிக்கும் எனவும் அதற்காகவே தான் அதிகமான பந்துகளை திட்டமிட்டு வீசுவதாகவும் சாஹல் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg