Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தோனி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, அவரை நிரூபித்துவிட்டார்: ஸ்டீவன் சுமித் புகழாரம்

In கிாிக்கட்
Updated: 13:10 GMT, Apr 23, 2017 | Published: 11:11 GMT, Apr 23, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Surenth
Dhoni With Stevan Smith

தோனியின் அதிரடியான துடுப்பாட்டம் அவரை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் பல்வேறு அழுத்தங்களில் இருந்து அவர் மீண்டுள்ளதாகவும் புனே அணியின் தலைவர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் கடந்த போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடவில்லை என தோனி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிராd போட்டியில் அதிரடியாக 61 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே ஸ்டீவன் சுமித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐதராபாத் அணியுடனான போட்டியானது கடைசி நேரம் வரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

இறுதி நேரம் வரை தோனி களத்தில் சிறந்த முறையில் தனது பங்களிப்பை செய்திருந்தார். கடந்த காலங்களில் தோனி மீது சுமத்தப்பட்ட பல்வேறு அழுத்தங்களில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.

பந்துவீச்சில் எங்களது அணியால் சரியான முறையில் திட்டமிட்டு செயற்பட முடியாமல் போனது. இருந்தாலும் துடுப்பாட்டத்தை சரியான முறையில் செய்து இருந்தோம்.

இந்த நிலையில், எங்கள் அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன. எனவே அந்த போட்டிகளிலும் வெற்றி பெற்று ஐ.பி.எல். புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் காண்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என ஸ்டீவன் சுமித் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg