Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முதல்வர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலமே ‘New India’ சாத்தியமாகும்: மோடி

In இந்தியா
Updated: 13:07 GMT, Apr 23, 2017 | Published: 11:29 GMT, Apr 23, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Shailu
Modi

அனைத்து மாநில முதல்வர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலமே புதிய இந்தியா திட்டம் (New India) சாத்தியமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிதி ஆயக் கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் 13 முதலமைச்சர்கள், 5 துணை முதலமைச்சர்கள், உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நிதி ஆயம் எடுத்துள்ளது. அரசின் உத்தரவுகளை மட்டும் பின்பற்றி நிதி ஆயம் செயற்படவில்லை. நிபுணர்கள், வல்லுநர்களும் இதில் உள்ளனர்.

மாநில அரசு கொள்கை முடிவில் தங்களது பங்களிப்பை அளிக்கின்றது. எனவே அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல்வர்கள் இணைந்து செயற்படுவதன் மூலமே ‘புது இந்தியா திட்டம்’ சாத்தியமாகும்.

மேலும் ஜி.எஸ்.டி. மசோதாவானது ஒரே நாடு, ஒரே நம்பிக்கை, ஒரே இலக்கு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. அந்தவகையில், ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg