Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் சேதமடைந்த வீடுகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும்

In இலங்கை
Updated: 05:24 GMT, Apr 24, 2017 | Published: 04:04 GMT, Apr 24, 2017 |
0 Comments
1235
This post was written by : Ravivarman

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் பெறுமதிக்குரிய கொடுப்பனவுகளை உரிமையாளர்களுக்கு வழங்குவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அலரி மாளிகையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தப் பகுதியில் வாடகை வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்குதல், அபாய வலயங்களில் இருந்து வெளியேற விரும்பும் குடும்பங்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுத்தல், பாதிப்புக்களை மதிப்பிடும் வரையில் 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குதல், வெளியேற விரும்பும் குடும்பங்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுத்தல், பாதிக்கப்பட்டவர்கள் வீடமைப்பு அதிகார சபையிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனுக்கான நிலுவையை இரத்து செய்தல், சேதமடைந்த சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற விடயங்கள் மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட சகல மக்களும் பிரதேச செயலக அலுவலகங்களுக்குச் சென்று தமது காணிகள் பற்றிய பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும். காணி உரித்துக்கள் தொடர்பான நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg