Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த 38 இந்தியர்கள் கைது

In இந்தியா
Updated: 09:02 GMT, Apr 24, 2017 | Published: 08:52 GMT, Apr 24, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Shailu
arrest

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கி, ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 38 இந்தியர்கள் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வருவதாக, பிரித்தானிய குடியுறவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஆப்கானியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இந்தியர்களில் 31 பேர், அனுமதிக்கப்பட்ட விசாக்காலம் முடிவடைந்த பிறகும் பிரித்தானியாவில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் 7 இந்தியர்கள் முறையான ஆவணங்கள் எதுவுமின்றி பணிபுரிந்து வந்துள்ளனர்.

எனவே விசா மோசடி செய்த குற்றத்திற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் எனவும், அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg