Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

திணறுகிறது மேற்கிந்திய தீவுகள் அணி!

In கிாிக்கட்
Updated: 05:27 GMT, Apr 25, 2017 | Published: 05:11 GMT, Apr 25, 2017 |
0 Comments
1227
icon_com
This post was written by : Anojkiyan
bre

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய (திங்கட்கிழமை) நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 28 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் பிஸ்சோவும், சிங்கும் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் களத்தில் இருந்தனர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 407 ஓட்டங்களை குவித்தது.

இதனைத் தொடர்ந்து, 121 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்று போட்டியின் இறுதி நாள் என்பதால், மேற்கிந்திய தீவுகள் அணி நிதானமாக துடுப்பெடுத்தாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள், மீதமுள்ள 6 விக்கெட்டுகளையும் சாய்த்து வெற்றியை தன் பக்கம் திருப்புவதற்கு கடுமையாக முயற்சிப்பார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg