Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இர்பான் பதானின் வருகை குஜராத் அணியை வலுப்படுத்துமா?

In கிாிக்கட்
Updated: 10:28 GMT, Apr 25, 2017 | Published: 09:07 GMT, Apr 25, 2017 |
0 Comments
1458
This post was written by : Anojkiyan

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள குஜராத் லயன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான வெய்ன் பிராவோ, காயம் காரணமாக நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சகல துறை வீரரான இர்பான் பதான் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அணியின் நம்பிக்கை வீரராக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வெய்ன் பிராவோ, தனது காயம் குணமடையாத காரணத்தால் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், பிராவோவின் இடத்தை நிரப்ப இந்திய அணியின் முன்னாள் இடது கை பந்துவீச்சாளர் இர்பான் பதானை, குஜராத் அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது.

102 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான், 80 விக்கெட்டுகள் மற்றும் 1137 ஓட்டங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg