Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வட்ஸ்அப் குறுஞ்செய்திகளை வாசித்துக்காட்டும் Apple Siri

In தொழில்நுட்பம்
Updated: 10:31 GMT, Apr 25, 2017 | Published: 09:50 GMT, Apr 25, 2017 |
0 Comments
1071
icon_com
This post was written by : Elakkiya
dims

அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளான ஐ-போன் மற்றும் ஐ-பாட்களில் (ipad) வழங்கப்பட்டுள்ள Apple Siriஇல் தற்போது வட்ஸ் அப்பிலுள்ள குறுஞ்செய்திகளை வாசிக்கும் ஆற்றல் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை கடந்த செப்டெம்பர் மாதம் முதல் குரல்பதிவு ஊடாக வட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்பும் வசதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது வெளியாகிய புதிய பதிப்பில் வட்ஸ்அப்பிலுள்ள குறுஞ்செய்திகளை சத்தமாக வாசிக்கக்கூடிய ஆற்றல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த சேவையை எமது கைப்பேசியில் செயற்படுத்திய பின்னர் ‘ஹே சிறி எனது இறுதி வட்ஸ்அப் செய்தியை வாசித்துக் காட்டு’ என்ற கோரிக்கையை எமது குரலூடாக முன்வைக்கும்போது செய்தியை அனுப்பியவரின் பெயருடன் செய்தியை வாசித்துக் காட்டும்.

அத்துடன் புலனாகும் காட்சிகள், Contact Info,  Group Info  என்பனவும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு தடவையில் ஒன்றிற்கு மேற்பட்ட ஸ்டேட்டஸ்களை தெரிவு செய்து பிறிதொருவருக்கு அனுப்ப அல்லது அழிக்க முடியும்.

மேலும் இப் புதிய பதிப்பானது iOS 7.0 அல்லது அதற்கு பின்னரான இயங்குதளங்களில் மட்டுமே செயற்படக்கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைக் கொண்ட இந்த வசதியின் ஊடாக குரல் வழி கட்டளைகள் மூலம் குறித்த சாதனங்களில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg