Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எதிர்ப்பு அரசியல், மக்களுக்கான வரப்பிரசாதங்களுக்கு முட்டுக்கட்டையாக அமையும்: ஸ்ரீநேசன்

In இலங்கை
Updated: 10:14 GMT, Apr 26, 2017 | Published: 08:46 GMT, Apr 26, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Risha
gnanamuthu-srinesan

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக திகழ்கின்ற பட்சத்தில், தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வந்தால் அதன்மூலம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- விவேகானந்தபுரம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதைவிடுத்து ஒருவர் செய்யும் சேவையை மற்றொரு தரப்பு குறைக் கூறிக் கொண்டிருப்பதால் பாதிக்கப்படப் போவது மக்களே.

எனவே மக்களின் அபிவிருத்திக்கு சாதகமான விடயங்களை கருத்திற் கொண்டு அதன்படி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தல் அவசியமாகும்.

கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருப்பதற்காக அனைத்திற்கும் எதிர்ப்பு வெளியிட்டு வந்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும்” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg