Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முத்துராஜவலையில் அமைகிறது புதிய குப்பை மேடு!

In இலங்கை
Published: 08:47 GMT, Apr 26, 2017 |
0 Comments
1394
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக, வத்தளை முத்துராஜவலையில் குப்பை மேடொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள குறித்த குப்பைமேட்டின் பணிகள் நிறைவடையும் போது, நாளாந்தம் 400 மெற்றிக் தொன் குப்பைகளை அங்கு சேகரிக்க முடியுமென இது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.

இதுவரை காலமும் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து அனர்த்தத்திற்கு உள்ளான பின்னர், குப்பைகளை சேகரிக்கும் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்திருந்தது.

குப்பைகளை கொட்டுவதற்கு நீதிமன்றத்தால் சில இடங்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், குறித்த இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு அந்தந்த பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையில், அமைச்சரவையால் தற்போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg