Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சைட்டம் கல்லூரிக்கு எதிராக கொழும்பில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 09:03 GMT, Apr 26, 2017 | Published: 09:01 GMT, Apr 26, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
IMG_4113

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக கொழும்பில் இன்று (புதன்கிழமை) மாலை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மருத்துவ பீடத்திற்கு முன்பாக இன்று மாலை 6.30இற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு, தொடர்ந்து கொழும்பு கோட்டை ரயில்வே நிலையம் வரை பேரணியாகச் சென்று, அங்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மருத்துவ பீட மாணவர் நடவடிக்கைக் குழுவின் அழைப்பாளர் ரியான் ஜயலத் குறிப்பிட்டுள்ளார்.

சைட்டம் கல்லூரி தொடர்பாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஏற்க முடியாதென்றும், இதற்கெதிராக தொடர்ந்தும் பல ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டத்தை இலங்கை மருத்துவ சபை அங்கீகரிக்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குறித்த கல்லூரியை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கு அண்மையில் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg