Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

துருக்கியில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி: மேலும் 803 பேர் கைது

In ஐரோப்பா
Published: 09:21 GMT, Apr 26, 2017 |
0 Comments
1216
icon_com
This post was written by : Elakkiya

துருக்கியில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் மேலும் 803 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட பொலிஸ் படையை இலக்கு வைத்து சுமார் 81 மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கைகளில் ஆயிரம் பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் 803 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் தலைநகர் அங்காராவுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது குறித்த கருத்துக்கணிப்பு நடைபெற்று முடிந்து பத்து நாட்களில் மேற்படி கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஜூலை மாதம் தோற்கடிக்கப்பட்ட மேற்படி இராணுவ சதிப்புரட்சியின் பின்னர் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இராணுவ வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பொது ஊழியர்கள் என ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg