Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரிய பிரச்சினைகள் குறித்து சீனா, ஜப்பான் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

In உலகம்
Published: 10:33 GMT, Apr 26, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Elakkiya

வடகொரிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடும் வகையில், கொரிய தீபகற்ப விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி வு டவெய் (Wu Dawei),  ஐப்பானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய மற்றும் ஓசியானிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் கென்ஜி கனசூகியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டோக்கியோவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்படி சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த சீன பிரதிநிதி, “கொரிய தீபகற்ப பிரச்சினை குறித்து நாம் மூன்று விடயங்களை தீர்மானித்துள்ளோம். ஒன்று தீபகற்பத்தின் குழப்பநிலையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளோம். அத்துடன் குறித்த பகுதியில் சமாதானத்தை நிலைநாட்டுவது முக்கியம் என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளோம். நிறைவாக தீபகற்ப பிரச்சினையை தீர்ப்பதற்கும்  ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்வதற்குk; இருதரப்பும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்க வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “ஜப்பானுக்கு மாத்திரம் இந்த கோரிக்கையை நாம் முன்வைக்கவில்லை. ஏனைய நாடுகளுக்கும் முன்வைக்கின்றோம். ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தினை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது சிந்தனை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg