Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரிய, அமெரிக்க படைகள் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சி

In உலகம்
Updated: 12:11 GMT, Apr 26, 2017 | Published: 12:11 GMT, Apr 26, 2017 |
0 Comments
1461
This post was written by : Elakkiya

கொரிய தீபகற்ப பதற்றங்களுக்கு மத்தியில் தென் கொரிய மற்றும் அமெரிக்க படையினர் இணைந்து இன்று கூட்டு இராணுவ மற்றும் விமானப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

சியொலின் வடகிழக்கு பகுதியிலிருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, பீரங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் போர் விமானங்கள் போன்றன இருதரப்பு படையினராலும் பயன்படுத்தப்பட்டது.

இது குறித்து தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம், மேற்படி பயிற்சி நடவடிக்கையில் இரண்டு நாடுகளையும் சேர்ந்த சுமார் 2000 துருப்புக்கள் பங்கேற்றிருந்ததாகவும் கே-2 தாங்கிகள், பிராட்லி போர் வாகனங்கள், ஏவுகணை ரொக்கெட் அமைப்புக்கள், அப்பாச்சி ஹெலிக்கொப்டர்கள் மற்றும் ஏ-10 போர் விமானங்கள் உள்ளிட்ட 250 இராணுவ ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1950-53 ஆம் ஆண்டு கொரிய போரின் பின்னர் தென் கொரியாவில் இராணுவ நிலைப்பாட்டை பலப்படுத்தியுள்ள அமெரிக்கா தற்போது, சுமார் 28 ஆயிரத்து 500 அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg