Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புதிய பிரசார ஸ்லோகங்களை வெளியிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர்கள்

In ஐரோப்பா
Updated: 11:10 GMT, Apr 27, 2017 | Published: 10:22 GMT, Apr 27, 2017 |
0 Comments
1087
icon_com
This post was written by : Risha
le a

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர்களான இமானுவேல் மக்ரோன் மற்றும் மரைன் லி பென் ஆகியோர் புதிய ஸ்லோகங்களையும் பதாதைகளையும் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ‘பிரான்ஸுடன் ஒன்றிணைந்து’ என்பது வலதுசாரி உறுப்பினர் இமானுவேல் மக்ரோனது பிரசார ஸ்லோகமாக அமைந்துள்ளதுடன், ‘பிரான்ஸை தெரிவுசெய்யுங்கள்’ என தீவிர வலதுசாரி கட்சி உறுப்பினர் லி பென் தனது பிரசார ஸ்லோகத்தை வெளியிட்டுள்ளார்.

இமானுவேல் மக்ரோனது பிரசார ஸ்லோகத்தை அவரது பிரசார குழுவினர் வெளியிட்டு வைத்த அதேவேளை, லி பென்னின் பிரசார ஸ்லோகமானது அவரது பிரசார முகாமையாளர் டேவிட் ரச்லைனினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இரு வேட்பாளர்களது பிரசார ஸ்லோகங்களும் தமது கட்சிகளை பிரதிபலிப்பதாக அன்றி தங்களது நாட்டை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg