Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எஸ்.எப். லொக்காவை அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

In இலங்கை
Updated: 12:08 GMT, Apr 27, 2017 | Published: 12:08 GMT, Apr 27, 2017 |
0 Comments
1157
This post was written by : Anojkiyan

அனுராதபுரம் இரவு விடுதி உரிமையாளரான கராத்தே வீரர் வசந்த சொய்சா கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இரோஷன் ரணசிங்க என்ற எஸ்.எப். லொக்கா, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாகனமொன்றினை கடத்தியது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரோஷன் ரணசிங்க, இன்று (வியாழக்கிழமை) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வசந்த சொய்சாவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததன் பின்னர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தால் கடும் பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg