Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொல்காத்தாவின் வெற்றிப்பாதைக்கு முட்டுக்கட்டை போடுமா டெல்லி அணி?

In கிாிக்கட்
Updated: 05:42 GMT, Apr 28, 2017 | Published: 05:10 GMT, Apr 28, 2017 |
0 Comments
1208
This post was written by : Anojkiyan
nmv

ஐ.பி.எல் தொடரின் 32வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் அரங்கேறும் இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு கௌதம் கம்பீரும் டெல்லி அணிக்கு சஹீர்கானும் தலைமை தாங்குகின்றனர்.

ஏற்கனவே 18வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியிடம் டெல்லி அணி 4 விக்கெட்டுகளால் தோல்வியை தழுவியது. ஆகையால் இன்றைய போட்டியில் டெல்லி அணி, கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், தரவரிசையில் இறுதியில் இருக்கும் டெல்லி அணி, இனிவரும் போட்டிகளில் சிறந்த ஓட்ட எண்ணிக்கையுடன் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற முடியும். அதனால் இனிவரும் போட்டிகளில் கட்டாயமாக வெற்றி பெறவேண்டும் என்ற அழுத்தத்துடன்  டெல்லி அணி களம் இறங்க வேண்டியுள்ளது.

அதேவேளை, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கொல்கத்தா அணி, இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg