Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிரிய மோதலுக்கு தீர்வு காண ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: அமெரிக்கா

In
Published: 04:37 GMT, Apr 28, 2017 |
0 Comments
1339
icon_com
This post was written by : Risha

சிரிய மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அனைத்து மட்டத்திலும் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுளுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலி ஐ.நா. பாதுகாப்பு சபையை வலியுறுத்தியுள்ளார்.

மத்தியகிழக்கு பிரச்சினை தொடர்பிலான ஐ.நா. பாதுகாப்பு சபையின் நேற்றைய (வியாழக்கிழமை) மாதாந்த கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

“சிரியாவில் சுமார் ஆறு ஆண்டுகளாக நீடித்துவரும் உள்நாட்டு மோதலை ரஷ்யா எண்ணினால் முடிவுக்கு கொண்டுவரலாம். எனவே இவ்விடயம் தொடர்பில் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பது அவசியமாகும்.

சிரியா மீதான எட்டு தீர்மானங்களை, ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துள்ளது. சிரியா மீதான தீர்மானங்களை ரஷ்யர்கள் இவ்வாறு தொடர்ந்து தடுத்து வந்தால் அது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே இதற்கு தீர்வை காண்பதற்கு நாம் பாதுகாப்பு சபையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

எனினும், ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மோதலை தடுக்கவும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதையும் உறுதிபடுத்தவே செயற்பட்டு வருகிறது என அமெரிக்க தூதரின் கருத்திற்கு பதிலளித்த ஐ.நா.விற்கான ரஷ்ய துணை தூதுவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg