Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் குறித்து தெரேசா மே கருத்து

In
Updated: 08:42 GMT, Apr 28, 2017 | Published: 08:41 GMT, Apr 28, 2017 |
0 Comments
1297
This post was written by : Sylviya

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் போது பிரித்தானியாவுக்கு நன்மை பயக்கும் விதத்தில் பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும் என்பதன் முக்கியத்துவம், ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெலின் பிரெக்சிற் நிலைப்பாட்டின் மூலம் புலனாகியுள்ளது என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

லீட்ஸில் நேற்று (வியாழக்கிழமை) பேரணியொன்றை நடத்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஏனைய 27 நாடுகளும் பிரெக்சிற்றிற்கு எதிரான கருத்துக்களையே தெரிவிக்க முனைகின்றன எனவும் பிரித்தானிய எதிர்க்கட்சிகள் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை குழப்பவே முயற்சிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளும் அதே சமயம் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படும் என சில பிரித்தானியர்கள் நப்பாசை கொண்டிருந்ததாக மெர்க்கெல் தெரிவித்தமையே, தெரேசா மே மேற்குறித்தவாறு கருத்து தெரிவிக்க காரணமாய் அமைந்தது.

பிரெக்சிற் பேச்சுவார்த்தை தொடர்பில் முன்னதாக கருத்து தெரிவித்திருந்த தொழிற்கட்சி, குறித்த பேச்சுவார்த்தைகள் பொறுப்பற்ற விதத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg