Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இரட்டை இலைச் சின்னம் குறித்த விவகாரத்தில் மேலுமொருவர் கைது!

In இந்தியா
Updated: 12:26 GMT, Apr 28, 2017 | Published: 10:17 GMT, Apr 28, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Risha
din

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு டி.டி.வி.தினகரன் இலஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற முகவர் நரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் எவ்வாறு கைமாறியது என்பது தொடர்பில் டி.டி.வி.தினகரனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் எதிரொலியாக, தாய்லாந்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி வந்த குறித்த நபரை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தினகரனுக்கும் குறித்த முகவருக்கும் இடையிலான தொடர்பு மற்றும் எந்தெந்த வழிகளில் பணம் கொண்டு வரப்பட்டது என்பன தொடர் டெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க டி.டி.வி.தினகரன் முயன்றதாகவும் இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, சுகேஷ் கடந்த 16ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து சுகேஷ் வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு 3 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து தினகரன் கடந்த 25ஆம் திகதி டெல்லி குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg