Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொடநாடு கொலை விவகாரம்: சந்தேகநபர் கைது

In இந்தியா
Updated: 11:20 GMT, Apr 28, 2017 | Published: 11:20 GMT, Apr 28, 2017 |
0 Comments
1263
This post was written by : Risha

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், சந்தேகநபர் கேரளாவில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) கைதாகியுள்ளார்.

இந்நிலையில், அளக்கரை அருகே உள்ள ஒரு சொகுசு பங்களாவில் கொள்ளை குறித்து திட்டம் தீட்டியதாகவும், கொடநாடு எஸ்டேட் பங்களா அருகே பதுங்கி இருந்து பல நாட்கள் உளவு பார்த்ததாகவும் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பாதுகாப்பு மிகுந்த கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை முயற்சியில் பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டதுடன், மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg