Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘வடக்கு நீலங்களின் சமர்’ – 260 ஓட்டங்களை குவித்தது கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி

In
Updated: 12:12 GMT, Apr 28, 2017 | Published: 11:51 GMT, Apr 28, 2017 |
0 Comments
2048
This post was written by : Varshini
வடக்கு நீலங்களின் சமர் (6)

வடக்கு நீலங்களின் சமர் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி, 260 ஓட்டங்களை குவித்துள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி, 53 பந்துகளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் கிசோகரன் 53 ஓட்டங்களையும் சுபிகரன் 48 ஓட்டங்களையும் யதுசன் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் 22 பந்துகளில் 100 ஓட்டங்களைக் கொடுத்து பிரதீசன் 8 விக்கட்டுகளையும், தர்சன் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg