Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுகாதாரத்தை மேம்படுத்த மேலதிக வளங்கள் தேவை: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்

In இலங்கை
Updated: 13:50 GMT, Apr 28, 2017 | Published: 13:40 GMT, Apr 28, 2017 |
0 Comments
1201
This post was written by : Ravivarman

“கிழக்கு மாகாணத்திற்கான சுகாதார நடவடிக்கைகளைத் திறனுடன் மேற்கொள்வதற்கு மேலதிகமான வளங்கள் தேவைப்படுகின்றன” என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஷீர் தெரிவித்தார்.

மாகாண சுகாதார அமைச்சர்களுக்கான மாநாடு நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தலைமையில் கொழும்பில் உள்ள இரத்த வங்கி தலைமையகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாண சுகாதாரத்துறையில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளையும் முடிந்தவரை சுகாதார அமைச்சர் நிவர்த்தி செய்துதர வேண்டும் என்று வேண்டிக் கொள்வதுடன் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற வைத்தியசாலைகளுக்கு நூற்றுக்கு மேற்பட்ட வைத்தியர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றது.

அத்துடன் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், அவர்களுக்கான வாகன வசதிகள், அம்பியுலன்ஸ், போன்ற பலதேவைகள் காணப்படுகின்றன. இவற்றிற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைந்து எடுக்கவேண்டும்.

அண்மையில் எமது மாகாணத்தில் தீவிரமாகப் பரவிய டெங்குநோய் மற்றும் வைரஸ் தொற்று என்பவற்றினை, இருக்கும் வளங்களைக் கொண்டு பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_0218 IMG_0220

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg