Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மே மாத முதல் வாரத்தில் முழு நாடும் ஸ்தம்பிதமடையும்: மருத்துவ அதிகாரிகள் சங்கம்

In இலங்கை
Updated: 04:56 GMT, Apr 29, 2017 | Published: 04:56 GMT, Apr 29, 2017 |
0 Comments
1206
This post was written by : Risha

முழு நாட்டையும் ஸ்தம்பிதமடையச் செய்யும் வகையில் எதிர்வரும் மே மாத முதல் வாரத்தில் பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் அரசாங்கம் இதுவரை சாதகமான தீர்மானத்தை முன்னெடுக்காத நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல்வேறு முனைகளில் போராட்டங்களை நடத்தியுள்ளன. அத்துடன் பல்வேறு அமைப்புகளும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. எனினும் அரச தரப்பில் இதற்கு சாதகமான முடிவுகள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

எனவே, எதிர்வரும் 03ஆம் திகதிக்கும் 05ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஒருநாள் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் 09ஆம் திகதிக்குள் அரசாங்கத்தின் சார்பில் சாதகமான பதில் கிடைக்காவிடில் தொடர் வேலைநிறுத்தத்திற்கான திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

வேலைநிறுத்த போராட்டத்திற்கு சுமார் 94 தொழிற்சங்கங்கள் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg