Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலை வழக்கில் தேடப்பட்ட ஜெயலலிதாவின் சாரதி விபத்தில் மரணம்!

In
Updated: 07:47 GMT, Apr 29, 2017 | Published: 06:19 GMT, Apr 29, 2017 |
0 Comments
1734
This post was written by : srikkanth

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாகன சாரதியான கனகராஜ் என்பவர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில் இன்று(சனிக் கிழமை) காலை இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றிலேயே இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் கனகராஜ் உயிரிழந்துள்ளமை, வீதி விபத்து தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24ம் திகதி ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் காவலில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதுடன் மற்றொரு காவலாளிக்கு காயம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg