Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மோல்ட்டாவில் பேச்சுவார்த்தை

In ஐரோப்பா
Updated: 06:46 GMT, Apr 29, 2017 | Published: 06:46 GMT, Apr 29, 2017 |
0 Comments
1267
This post was written by : Sylviya

துருக்கியுடனான எதிர்கால உறவுகள் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மோல்ட்டாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

குறித்த பேச்சுவார்த்தை நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது. ஒன்றியத்துடன் இணைவது குறித்த துருக்கியின் விருப்பத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி தெரிவித்து வரும் போதிலும், துருக்கியினுடனான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலேயே இந்த கூட்டத்தின் போது அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லட் கவுசோக்குளுவையும் நேரில் சந்தித்துள்ளனர்.

துருக்கியில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் வெற்றி, துருக்கியில் கடந்த வருடம் நடத்தப்பட்ட இராணுவ சதிப்புரட்சியைத் தொடர்ந்து எர்டோகனால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சில நாடுகள் நாஸி முறைமையை தழுவி செயற்படுகின்றன என துருக்கி தெரிவித்த கருத்து போன்ற பல்வேறுபட்ட காரணங்களால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல, துருக்கி ஒன்றியத்தில் இணைவது குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

இது இவ்வாறிருக்க, துருக்கியின் மாபெரும் வெளிநாட்டு முதலீட்டாளராகவும் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராகவும் ஐரோப்பிய ஒன்றியம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg