Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாயக்கல்லி மலைப் பிரதேசத்தை மீட்பதற்கான அமைதிப்பேரணி!

In
Published: 13:29 GMT, Apr 29, 2017 |
0 Comments
1296
icon_com
This post was written by : Rajinthan
IMG-20170429-WA0002

அம்பாறை மாவட்டம் இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலைப் பிரதேசத்தை மீட்பதற்கான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் அமைதிப் பேரணி இன்று (சனிக்கிழமை) கல்முனையில் இடம்பெற்றது.

பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில் புத்தர் சிலையை வைக்காதே!, அரசே முஸ்லிம்களின் நிலங்களை அபகரிக்காதே, நல்லாட்சியை ஏற்படுத்தியதற்கு கைமாறாக காவி உடை பயங்கவரவாதத்தை தடுத்து நிறுத்து, என்ற கோஷங்களுடனும் சுலேகங்கள் பொறிக்கப்பட்ட பாதாதைகளுடனும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அமைதிப் பேரணி ஊர்வலம் கல்முனைப் பிரதேச செயலகம் வரை சென்று கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் நிறைவடைந்தது. இவ் எதிர்ப்பு நடவடிக்கை, சிவில் சமூக அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20170429-WA0004 IMG-20170429-WA0007

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg