Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மறிச்சுக்கட்டி விவகாரம் குறித்து ஆராய்கிறது சுயாதீன குழு!

In இலங்கை
Updated: 07:57 GMT, Apr 30, 2017 | Published: 04:38 GMT, Apr 30, 2017 |
0 Comments
1259
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
maithri

மறிச்சுக்கட்டி பிரதேச மக்களின் காணிகளை கையப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர வர்த்தமானி தொடர்பாக ஆராய்வதற்கு, சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

குறித்த குழுவில் உள்ளடக்கும் வகையில் பிரதிநிதி ஒருவரை தந்துதவுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர வர்த்தமானியில் மறிச்சுக்கட்டி பிரதேச மக்களின் 4030.525 ஹெக்டேயர் விஸ்தீரணம் கொண்ட காணி கையகப்படுத்தப்பட்டதையடுத்து, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் அண்மையில் ஜனாதிபதியின் செயலாளருடன் உயர்மட்ட சந்திப்பை நடத்தியிருந்தனர்.

இச் சந்திப்பின்போது குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்தே சுயாதீன குழுவொன்றை அமைத்து இப்பிரச்சினை குறித்து ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg