Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிலிப்பைன்ஸ் – இந்தோனேசியாவுக்கு இடையில் புதிய கப்பற் பாதை திறந்துவைப்பு

In உலகம்
Published: 05:14 GMT, Apr 30, 2017 |
0 Comments
1321
icon_com
This post was written by : Sylviya

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு இடையில் உள்ள வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  புதிய கப்பற் பாதையொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் பொருட்டு  பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோவை (Rodrigo Duterte) இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ (Joko Widodo)  பிலிப்பைன்ஸின் டாவோ (Davao) நகரில் சந்தித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது கருத்து தெரிவித்த விடோடோ, “இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சுக்கு இடையிலான உறவுகள் கடந்த 30 வருடங்களாக வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ள புதிய கப்பற் பாதை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். இந்த புதிய கப்பற் பாதை மூலம் பிலிப்பைன்ஸின் டாவோ (Davao) மற்றும் இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசி (North Sulawesi) ஆகிய துறைமுகங்களுக்கு பயணிக்கச் செல்லும் நேரம் 3 நாட்களாக குறைவடையும்” என தெரிவித்தார்.

மேலும் குறித்த பாதை மூலம் தென்கிழக்காசிய நாடுகளும் பயனடையுமென  பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg