Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தப்பாவை தேசிய அணி தெரிவாளர்கள் கூர்மையாக அவதானிக்க வேண்டும்: கம்பீர்

In கிாிக்கட்
Updated: 06:09 GMT, Apr 30, 2017 | Published: 05:52 GMT, Apr 30, 2017 |
0 Comments
1948
This post was written by : Shailu

சிறப்பாக விளையாடி வரும் உத்தப்பாவை இந்திய தேசிய அணி தெரிவாளர்கள் கூர்மையாக அவதானிக்க வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

டெல்லி அணிக்கெதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் காப்பாளரான உத்தப்பா, அணிக்காக அரைச் சதத்தை பெற்றுக் கொடுத்தார்.

விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்டத்திலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் உத்தப்பா குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே கம்பீர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கெதிராக துடுப்பாட்டம் மற்றும் விக்கெட் காப்பாளர் ஆகிய இரண்டு துறையிலும் உத்தப்பா சிறப்பாக செயற்பட்டார்.

அதிரடியாக விளையாடும் உத்தியை பெற்றுள்ள அவர், பந்தை நேராக அடிக்கும் திறனை பெற்றுள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே தெரிவாளர்கள் அவரது ஆட்டத்தை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg