Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழக மீனவர்களின் படகுகளை படிப்படியாக விடுவிப்போம்: இலங்கை அரசு அறிவிப்பு

In இந்தியா
Updated: 08:03 GMT, Apr 30, 2017 | Published: 07:20 GMT, Apr 30, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Rajinthan
mahinda_amaraweera

சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டுமானால் மீனவர்கள் இனி எல்லை தாண்டி வரமாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும் என்று இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மீன்பிடி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சேதமான படகுகளை தமிழக மீனவர்களே திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்த நிபந்தனைகளின் படி பகுதி பகுதியாக தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிரகாரம், முதலில் 20 படகுகளை விடுவிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ் அறிவிப்புக்கு தமிழக மீனவர் சங்கத் தலைவர்களான என்.ஜே.போஸ், எமரிட், தேவதாஸ் ஆகியோர் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர். அத்தோடு, ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 143 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தாக்கப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழக மீனவர்களின் 143 படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், பாரத பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பின்னணியில் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg