Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவராமின் படுகொலை தொடர்பான உண்மைகள் வெளிவர வேண்டும்: இரா.சம்பந்தன்

In இலங்கை
Updated: 16:08 GMT, Apr 30, 2017 | Published: 10:13 GMT, Apr 30, 2017 |
0 Comments
1365
This post was written by : Ravivarman

தற்போது நாட்டில் நிலவும் சாதகமான சூழ்நிலையினைப் பயன்படுத்தி ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை தொடர்பான உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில், சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்கள் சமுதாயம் சிவராம், நடேசன், சுகிர்தராஜன் போன்ற பல ஊடகவியலாளர்களை இழந்திருக்கின்றது. பல்வேறு காரணங்களின் நிமித்தம் சமூகம் தொடர்பான பல உண்மைகளை எழுதியதன் மூலம் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

சிவராமைப் பொறுத்தவரையில் எந்தவொரு விடயத்தினையும் பல கோணங்களில் ஆராய்ந்து அவருடைய எழுத்துக்களால் வெளிக் கொண்டு வந்ததன் மூலம் ஊடகத்துறைக்கு மிகச்சிறந்த பங்களிப்பினை வழங்கியவர். அந்தவகையில் சிவராமின் இறப்பினை பெரும் இழப்பாக கருதுகின்றேன்.

ஊடகவியலாளர்களின் கொலைச்சம்பவங்களின் விசாரணைகள் துரிதப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு பலவித அழுத்தங்களை வழங்குவதற்கு நாம் தயாராக  வேண்டும்” என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

20170429_210122 20170429_204716

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg