Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மே தின கூட்டத்துக்கு வராவிட்டாலும் மஹிந்த மீது நடவடிக்கை இல்லை: சுசில் பிரேமஜயந்த

In இலங்கை
Updated: 16:01 GMT, Apr 30, 2017 | Published: 11:04 GMT, Apr 30, 2017 |
0 Comments
1333
icon_com
This post was written by : Anojkiyan
SRI LANKA-POLITICS-RAJAPAKSE

மே தின கூட்டத்துக்கு வராவிட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாளை (திங்கட்கிழமை) காலி முகத்திடலில் நடைபெறவுள்ள கூட்டு எதிரணியினரின் மே தினக்கூட்டத்துக்கு மஹிந்த முக்கியத்துவம் கொடுப்பார் என கருதப்படுவதால் சுதந்திர கட்சியின் மே தினத்துக்கு சமூகமளிப்பது சந்தேகமே.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரசன்ன ரணதுங்க உள்ளடங்களாக கூட்டு எதிரணியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்துக்கு வராவிட்டால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாக தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் சுசில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் மிகப்பெரிய மே தினக்கூட்டம் கண்டியிலேயே இடம்பெறும் எனவும், கண்டிக்கு அதிகளவிலான மக்கள் தொகை வந்த நாளாக இம்முறை சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் பதிவாகும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg