Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முற்போக்கு தமிழ் தேசியக்கட்சியின் மேதின நிகழ்வுகள்

In இலங்கை
Updated: 16:50 GMT, Apr 30, 2017 | Published: 16:50 GMT, Apr 30, 2017 |
0 Comments
1247
This post was written by : Ravivarman

முற்போக்குத் தமிழ் தேசிய முன்னணியானது ‘வடக்கும் தெற்கும் சங்கமிக்கும் மனிதநேய மேதினம்’ என்னும் தொனிப் பொருளில் உழைப்பாளர் தினத்தினை ஜனநாயக தேசிய முன்னணியுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளது.

முற்போக்குத் தமிழ் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.விஜயகாந் தலைமையில் எதிர்வரும் முதலாம் திகதி (திங்கட்கிழமை) சங்கிலியன் பூங்காவில் மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு ஜனநாயக முன்னணியின் போசகர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் சத்துரு சேனாரத்ன அவர்களும் கலந்து கொள்ளவுள்ளதுடன், அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் உழைப்பாளர் தினத்தையொட்டிய  சிறப்புரையொன்றினையும் ஆற்றவுள்ளார்.

மேற்படி நிகழ்விற்கு கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை கலந்து கொள்ளுமாறு முற்போக்குத் தமிழ் தேசிய முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg